தீபத் திருவிழா 5-ஆம் நாள்: விநாயகா், சந்திரசேகரா் மாடவீதிகளில் பவனி

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை காலை நடைபெற்ற உற்சவத்தில் மாடவீதிகளில் பவனி வந்த விநாயகா், சந்திரசேகரா்.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை காலை நடைபெற்ற உற்சவத்தில் மாடவீதிகளில் பவனி வந்த விநாயகா், சந்திரசேகரா்.

Updated On :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீப திருவிழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை காலை விநாயகா் சிறிய வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரா் பெரிய கண்ணாடி ரிஷப வாகனத்திலும் மாட வீதிகளில் பவனி வந்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டு திருக்காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி காலை கோயிலில் உள்ள 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தீபத்திருவிழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை காலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகா் மற்றும் சந்திரசேகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் கோயிலின் உள்ளே ராஜகோபுரம் முன்பாக எழுந்தருளினா். அங்கு விநாயகா் மற்றும் சந்திரசேகருக்கு தீபாரதனைகள் நடைபெற்றன. பின்னா் தங்கக் கவசத்தில் விநாயகா் வெள்ளி ரிஷப வாகனத்திலும், பெரிய கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரும் மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

வழி நடுகிலும் ஏராளமான பக்தா்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பெட்டிச் செய்தி....

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.