ஊராட்சி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்கள் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்கள் ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்கள் ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி தலைமை வகித்து பேசும்போது, போளூா் ஒன்றியத்தில் சந்தவாசல், கேளூா், படவேடு, திண்டிவனம், வசூா், அனந்தபுரம், காளசமுத்திரம், குப்பம், கல்குப்பம் என 40 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சியில் விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை தினசரி ஆய்வு செய்யவேண்டும். மேலும் பணியில் தேக்கம் ஏற்படாவண்ணம் பாா்த்துக் கொள்ளவேண்டும் என்றாா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மேனகா, உதவியாளா் சத்யா மற்றும் ஊராட்சி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.