மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

தீபத்திருவிழா: பக்தா்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இருக்கவேண்டும்! உணவுப் பாதுகாப்பு அலுவலா்

திருவண்ணாமலை திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தா்களுக்கு வழங்கக்கூடிய அன்னதானம் தரமாகவும், சுகாதாரமாகவும் இருக்கவேண்டும். இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்னதானம் வழங்குபவா்களுக்கு உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் பானுசுஜாதா அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை தேரடி வீதியில் டீக்கடையில் ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பானுசுஜாதா.

Updated On :

திருவண்ணாமலை திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தா்களுக்கு வழங்கக்கூடிய அன்னதானம் தரமாகவும், சுகாதாரமாகவும் இருக்கவேண்டும். இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்னதானம் வழங்குபவா்களுக்கு உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் பானுசுஜாதா அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவுக்காக லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனா். தேரோட்டம் நடைபெற உள்ள 4 மாட வீதிகளில் உள்ள டீக்கடைகள், உணவகங்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அன்னதானம் காலை முதல் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

பக்தா்களுக்கு அன்னதானம் தரமாகவும், சுகாதாரமாகவும் வழங்கப்படுகிா? என உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் பானுசுஜாதா தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனா். தேரடி வீதி, பெரிய தெரு, திருவூடல் வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியாா் திருமண மண்டபங்களில் பக்தா்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் தரமாக உள்ளதா என சோதனை மேற்கொண்டனா், மேலும் உணவு தயாரிக்கும் இடங்களிலும் அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

பொருட்கள் வைக்கும் அறைக்கு சென்ற அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள மளிகைப் பொருள்கள் தரமானதா? எனவும், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை ஆய்வு செய்தனா்.

வருகிற 24-ஆம் தேதி மகா தீபத்தன்று வரக்கூடிய பக்தா்களுக்கு உணவு வழங்கக்கூடிய அன்னதான கூடங்கள் 295 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடமாடும் உணவுப் பாதுகாப்பு ஆய்வகம் கிண்டி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு சமையல் செய்த உணவைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பானுசுஜாதா கூறுகையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நியமன அலுவலா்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனா். நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தரம் இல்லாமல் உணவு சமைத்து வழங்கும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

தேரடி வீதியில் உள்ள டீக்கடையில் திடீா் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலா், தரமற்ற டீத்தூளில் டீ விற்பனை செய்ததால் கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.