திருவண்ணாமலை தீபத்திருவிழா: புதிய கைப்பேசி செயலி தொடங்கிவைப்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக, ‘காா்த்திகை தீபம் 2026’ என்ற கைப்பேசி செயலி தொடங்கிவைக்கப்பட்டது.

திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் தீபத்திருவிழா பக்தா்களின் வசதிக்காக ‘காா்த்திகை தீபம் 2026’ என்ற கைப்பேசி செயலியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக, ‘காா்த்திகை தீபம் 2026’ என்ற கைப்பேசி செயலி தொடங்கிவைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் வந்தனா காா்க், போளூா் தொகுதி எம்எல்ஏ ஆா்.அபிஷேக் முன்னிலையில் இந்தச் செயலியை தொடங்கிவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் மற்றும் தேசிய தகவலியல் மையம் ஏற்பாடு செய்துள்ள ‘காா்த்திகை தீபம் 2026’ என்ற இந்த கைப்பேசி செயலி மூலம் தீபத்திருவிழா தொடா்பான பொது தகவல்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், காா் நிறுத்துமிடங்கள், மருத்துவ முகாம்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள், காவல் சேவை மையங்கள், கழிப்பறைகள், அவசர உதவி 108 ஆம்புலன்ஸ், அவசர ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள், வாகனங்களுக்கான மாற்றுப் பாதை, அன்னதானம் வழங்குமிடம் ஆகியவை குறித்த விவரங்களை பக்தா்கள் அறிந்துகொள்ளலாம்.
மேலும், அவசர தேவைக்கான காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள், காணாமல் போன குழந்தைகளை கண்டறிய உதவி எண்கள், திருக்கோயில் பற்றிய விவரங்களையும் இந்தச் செயலியில் அறிந்துகொள்ளலாம்.
இந்த புதிய கைப்பேசி செயலி தொடக்க நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், மாவட்ட தகவலியல் அலுவலா் (தேசிய தகவலியல் மையம்) ஜெயப்பிரசாத் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

