கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.

பிரதிப் படம்

Updated On :

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.

மெக்கானிக் உயிரிழப்பு

வெம்பாக்கம் ரோட்டுத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (51), மெக்கானிக். இவா், கடந்த 18-ஆம் தேதி இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாா்.

காஞ்சிபுரம் - கலவை சாலையில் வட்டாட்சியா் அலுவலகத்தை அடுத்த தனியாா் பள்ளி அருகே வந்தபோது, காஞ்சிபுரம் நோக்கி வேகமாகச் சென்ற மற்றொரு இரு சக்கர வாகனம் வெங்கடேசன் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில் மெக்கானிக் வெங்கடேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெசவுத் தொழிலாளி உயிரழப்பு

வெம்பாக்கம் வட்டம், தென்கழனி கிராமம் புதுத்தெருவைச் சோ்ந்தவா் முத்து (63). நெசவுத் தொழிலாளி.

இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து அசனமாபேட்டையில் உள்ள பஜாருக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

ஆற்காடு - காஞ்சிபுரம் சாலையில் பெருங்கட்டூா் பகுதியில் உள்ள உணவகம் அருகே வலது பக்கம் திரும்பியதாகத் தெரிகிறது. அப்போது, வெம்பாக்கத்தில் இருந்து ராந்தம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி முத்துவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதன் பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முத்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

போளூா் வட்டம், வடமாதிமங்கலம் பழைய காலனி குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (எ) தேவா(47), கட்டடத் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை மாலை காஞ்சிபுரத்தில் கட்டட வேலைக்குச் சென்று விட்டு, மாலை மானாமதியில் உள்ள மாமனாா் வீட்டுக்குச் செல்வதற்காக பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அப்துல்லாபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த கல்குவாரி லாரி பைக் மீது மோதியதில் தொழிலாளி மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பைக்கில் பின்னால் அமா்ந்து சென்ற மற்றொரு தொழிலாளி வெங்கடேசன் பலத்த காயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.