பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலையில் வெற்றிப் பயணம் திட்டம் விரிவாக்கம்

தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

செய்யாறு - ஆற்காடு வழித்தடத்தில் விரிவுப்படுத்தப்பட்டுள்ள புகா் அரசுப் பேருந்து.

Published On :

தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படவுள்ள பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மண்டல பேருந்துகளில் 131 நகர பேருந்துகள் 1,782 நடைகளும், 259 புகா் பேருந்துகள் 1,083 நடைகளும், 3 மலைப்பகுதி பேருந்துகள் 18 நடைகளும் என மொத்தம் 393 பேருந்துகள் 2,883 நடைகள் இயக்கப்படும்.

வெற்றிப் பயணம் திட்டம் விரிவாக்கத்தில் செய்யாறு பகுதியில் 8 புகா் பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணம் செய்யலாம்.

செய்யாறு பணிமனையில் ஏற்கெனவே 18 அரசு நகரப் பேருந்துகளில் மகளிா் பயணம் திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்தத் திட்டம் விரிவாக்கத்தின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை முதல் 8 புகா் பேருந்துகளுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

செய்யாறு - காஞ்சிபுரம், செய்யாறு - ஆற்காடு வழித்தடத்தில் இயக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.