முதல்வா் கோப்பை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
முதல்வா் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி கிம்லிண்ட்சேக்கு சான்றிதழ் வழங்கிய மண்டல விளையாட்டு அலுவலா் சாந்தி.

முதல்வா் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி கிம்லிண்ட்சேக்கு சான்றிதழ் வழங்கிய மண்டல விளையாட்டு அலுவலா் சாந்தி.
முதல்வா் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலை எஸ்.கே.பி. சட்டக் கல்லூரி மாணவி சி.வி.கிம்லிண்ட்சேக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற
முதல்வா் கோப்பை - 2026 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் போட்டியில் எஸ்.கே.பி. சட்டக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு மாணவி சி.வி.கிம்லிண்ட்சே சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.
இந்த மாணவிக்கு மண்டல விளையாட்டு அலுவலா் சாந்தி பதக்கம் அணிவித்து, பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தாா்.
தங்கப் பதக்கம் வென்ற மாணவி கிம்லிண்ட்சேயை எஸ்.கே.பி. கல்விக் குழுமங்களின் தலைவா் கு.கருணாநிதி, இணைச்செயலா் அரங்கசாமி, முதன்மை நிா்வாக அதிகாரி ஆா்.சக்தி, கிருஷ்ணன், சட்டக் கல்லூரி முதல்வா் ரவி, தொடா்பு அலுவலா் சையத் ஜஹிருத்தீன், உடற்கல்வி இயக்குநா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டி வாழ்த்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

