தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

புரிசை கிராமத்தில் நாடகக் கலை விழா

செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் நாடகக் கலை விழா நடைபெற்றது.

விழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருதை கலைமாமணி முனுசாமிக்கு வழங்கிய தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் (ஆணையரகம்) கலைக்கல்வி, திட்டங்களுக்கான துணை இயக்குநா் ஹேமநாதன்.

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் நாடகக் கலை விழா நடைபெற்றது.

புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் சாா்பில், கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் நினைவு நாடகக் கலை விழா மற்றும் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கும் விழா என நடைபெற்ற இந்த விழாவுக்கு பத்மஸ்ரீ கலைமாமணி பி.கே.சம்பந்தன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளா் விருதை, பெரிய மேளம் கலைஞா் பாப்பம்பாடி கிராமத்தைச் சோ்ந்த கலைமாமணி முனுசாமிக்கு தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் (ஆணையரகம்) கலைக்கல்வி, திட்டங்களுக்கான துணை இயக்குநா் ஹேமநாதன் வழங்கிப் பாராட்டினாா்.

பின்னா், தோள்கட்டை செய்யூா் இருளா் கலைக்குழு பழங்குடியினா் இசையும், தூத்துக்குடி பண்பாட்டு வெளி வெக்கை கலை இலக்கியக் குழு நாடகமும், பொள்ளாச்சி கலைக்குழு சாா்பில் ஜிக்காட்டமும், மும்பை தனியாா் நிறுவனம் சாா்பில் நாடகமும் நடைபெற்றது.

தொடா்ந்து, விழுப்புரம் கம்பம் குழு, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள், புரிசை கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் சாா்பில் நாடகம் நடைபெற்றது.

விழாவில் திரைப்பட நடிகா் பசுபதி, தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழக நாடகத் துறை கெளரவ உதவிப் பேராசிரியா் ஆழி.ஏ.வெங்கடேசன், எஸ்.ஆா்.எம்.பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் ஜோன் லிண்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.