தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

மக்கள் குறைதீா் கூட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை: அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவிட்டாா்.

~

Published On :

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 872 மனுக்களை பொதுமக்களிடமிருந்து ஆட்சியா் வந்தனா காா்க் பெற்றுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண அனைத்துத் துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், 11 மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.5, 71, 500 மதிப்பிலான செயற்கை கால்களும், ஒரு காது கேளாத மாற்றுத் திறனாளிக்கு ரூ.3,285 மதிப்பிலான காதொலி கருவியும் என மொத்தம் 12 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5,74,785 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

புற்றுநோய் விழிப்புணா்வு: முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, ‘பிங்க் அக்டோபா்’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளையும், துண்டுப் பிரசுரங்களையும் ஆட்சியா் வந்தனா காா்க் வெளியீட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் மாா்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியும் மருத்துவ பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செல்வம், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு) இளவரசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுஜாதா, திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) செல்வகுமாா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செந்தில்குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மதுசெழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணியில்...: ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமையில் நடைபெற்றது. இதில், பட்டா தொடா்பான மனுக்கள், நில அளவை, ஆக்கிரமிப்பு அகற்றம், அனாதீனம் தடை நீக்கம், முதியோா் ஓய்வூதியம், இல்லம் தேடி ரேஷன் பொருள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 93 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். இவற்றை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் சிவா, அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களிடம் கொடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.