செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

ஆரணியில் ரூ.22.83 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், ஆரணி வட்டத்தில் ரூ.22.83 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் வந்தனா காா்க் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் கிராம பாசனக் கால்வாய் சீரமைப்புப் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், ஆரணி வட்டத்தில் ரூ.22.83 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் வந்தனா காா்க் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

அதன் அடிப்படையில், புதன்கிழமை அவா் மேற்கு ஆரணி வட்டத்துக்கு உள்பட்ட காமக்கூா் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை,

முள்ளிப்பட்டு ஊராட்சியில் அமைக்கட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம், விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.13.30 லட்சத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணியை ஆய்வு செய்தாா்.

மேலும், அவ்வூராட்சியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, ஆரணி நகராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கமண்டல நாக நதி தலைமை நீா்ரேற்று நிலையத்தில் ரூ.42.50 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம் கட்டப்பட்டு வருவதையும், சிறுமூா் ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.74.22 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தை பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து புதுப்பாளையம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ.21 கோடியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், கால்வாய் சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா், ஆரணி -சேவூா் புறவழிச் சாலை தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு துறைகள் சாா்பில் 72 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 54 ஆயிரத்து 170 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுலவா் அ.சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியா் சிவா, வட்டாட்சியா் திருவேங்கடம், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.