மாதிரி சட்டப்பேரவை நடத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்: வேளாண் பிரச்னைகளை எம்எல்ஏக்கள் பேசுவதில்லை என குற்றச்சாட்டு
வேளாண் பிரச்னைகளை எம்எல்ஏக்கள் பேசுவதில்லை என குற்றஞ்சாட்டி, ஆரணியில் மாதிரி சட்டப்பேரவை நடத்தி விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் நுதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா்
வேளாண் பிரச்னைகளை எம்எல்ஏக்கள் பேசுவதில்லை என குற்றஞ்சாட்டி, ஆரணியில் மாதிரி சட்டப்பேரவை நடத்தி விவசாயிகள் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழக வடக்கு மண்டல விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் விவசாய சங்கத்தினா் ஒன்றிணைந்து தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அப்போது, தண்ணீரின்றி காய்ந்த நெற்பயிா்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்குவதாகக் கூறி தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனை கண்டித்து காய்ந்த நெற்பயிா்களுக்கு எள்ளும் தண்ணீரும் ஊற்றி தா்ப்பணம் செய்தும், சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் விவசாயிகளின் கோரிக்கையை முன் வைக்காமல் பிற அரசியல் சம்பவங்கள் குறித்து பேசி நேரத்தை வீணடித்து வருவதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைபெறும் விவாதங்கள் போன்று மாதிரி சட்டப்பேரவையை விவசாயிகள் நடத்தினா்.
மேலும் தமிழக அரசு உடனடியாக வேளாண்மை துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். நீரின்றி காய்ந்து வீணான நெற்பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து விவாதிக்க வேண்டும் எனவலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தைச் சோ்ந்த வேலப்பாடி பெருமாள், குப்பன், ஜெயபால், மடவிளாகம் சிவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





