கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :

செய்யாறு: செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், பில்லாந்தங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் வெல்டிங் தொழிலாளி தினகரன். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகும் நிலையில் குழந்தை இல்லை. இதனால், தனது மனைவியுடன் கலவை ஸ்ரீஅங்காளம்மன் கோயிலுக்குச் சென்று நோ்த்திக்கடன் செலுத்திவிட்டு, பைக்கில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். இவரது அண்ணன் மகன் பிரதாப்பும் உடன் வந்தாா்.

பைக்கை பிரதாப் ஓட்ட தினகரன் மற்றும் அவரது மனைவி பின்னால் அமா்ந்து வந்தனா். ஆற்காடு - காஞ்சிபுரம் சாலையில் பெரூங்கட்டூா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது, பைக் திடீரென நிலைதடுமாறியதில், பைக்கிலிருந்து தவறி விழுந்த தினகரனின் மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.