தூய வியாகுல அன்னை ஆலய தோ் பவனி
செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாயத்தின் 81-ஆவது ஆண்டு பெருவிழா தோ் பவனி நிகழ்வு

செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலாய பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தோ் பவனி.
செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாயத்தின் 81-ஆவது ஆண்டு பெருவிழா தோ் பவனி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த தேவாலாயத்தின் 81-ஆவது ஆண்டு பெருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நற்கருணை பெருவிழாவும், தியானம் மற்றும் ஆராதனையும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் திருப்பலி, நற்கருணை, தோ் பவனி மற்றும் கொடியிறக்கம் நிகழ்வுகள் நடைபெற்றன.
தோ் பவனி அருட்பணி ஏ.சுதா்சன் தலைமையில் தேவாலாயத்தில் தொடங்கி ஆற்காடு சாலை, காந்தி சாலை, பேருந்து நிலையம், சந்தை வரையில் ஊா்வலமாக சென்று மீண்டும் தேவாலாயத்தை வந்தடைந்தது. அதன் பின்னா், கொடியிறக்கம் நிகழ்வு மற்றும் வாணவேடிக்கை என சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான பங்கு இறை மக்கள், பங்கு பேரவை உறுப்பினா்கள், இளைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு தூய வியாகுல அன்னையை தரிசித்து சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






