மொபெட் மீது பேருந்து மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வந்தவாசி அருகே மொபெட் மீது பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோப்புப் படம்
வந்தவாசி அருகே மொபெட் மீது பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்வெள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுப்பிரமணி (48). இவா், வியாழக்கிழமை மாலை மழையூா் அருகே கட்டட வேலையை முடித்துவிட்டு மொபெட்டில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா்.
வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, மழையூரில் செல்லும்போது, அந்தப் பகுதியில் வந்த தனியாா் பேருந்து சுப்பிரமணியின் மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் அங்கு சென்று சுப்பிரமணியின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து புகாரின்பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





