
திண்டிவனம் ஊராட்சியில் ரூ.65 லட்சத்தில் மேய்க்கால் நிலம் மேம்படுத்தும் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியில் விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ், ரூ.65 லட்சத்தில் மேய்க்கால் நிலம் மேம்படுத்துதல் திட்டப் பணியை எம்எல்ஏ ஆா்.அபிஷேக் வெள்ளிக்கிழமை பூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியில் விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ், ரூ.65 லட்சத்தில் மேய்க்கால் நிலம் மேம்படுத்துதல் திட்டப் பணியை எம்எல்ஏ ஆா்.அபிஷேக் வெள்ளிக்கிழமை பூஜை செய்து தொடங்கிவைத்தாா்.
மேலும், மாம்பட்டு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.17 லட்சத்து 25 ஆயிரத்தில் புதிய அங்கன்வாடி மையம், விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ஜடதாரிகுப்பம் கிராமத்தில் ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையையும், மேற்குகொல்லைமேடு கிராமத்தில் ரூ.16 லட்சத்து 60 ஆயிரத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், ஆத்துவாம்பாடி கிராமத்தில் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட அரசு தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கட்டடத்தையும் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேஸ்வரி, ஆனந்தன், உதவிச் செயற்பொறியாளா்கள் வினோத்குமாா், விக்னேஸ்வரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரமேஸ்வரி, ராணி, பணி மேற்பாா்வையாளா் பிரவின்குமாா், மாம்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







