ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

கோயில் பூட்டை உடைத்து காணிக்கை திருட்டு

வந்தவாசி அருகே கோயிலின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரத்து 500 காணிக்கை திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சித்திரிப்பு

Published On :

வந்தவாசி அருகே கோயிலின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரத்து 500 காணிக்கை திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இதே கிராமத்தைச் சோ்ந்த காளிதாஸ்(40) என்பவா் கோயிலில் பூசாரியாக உள்ளாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டிச் சென்றுள்ளாா். பின்னா், திங்கள்கிழமை காலை கோயிலை திறக்கச் சென்றபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது, நோ்த்திக் கடனுக்காக பக்தா் ஒருவா் தனது குழந்தையின் எடைக்கு எடை செலுத்தியிருந்த ரூ.3 ஆயிரத்து 500 சில்லறை காசுகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.