மா மரங்களை நாசம் செய்த யானை

பேர்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் இருந்து தனியாக வந்த யானை ஒன்று மா மரங்களை முறித்து நாசம் செய்து விட்டு சென்றுள்ளது
Updated on
1 min read

பேர்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் இருந்து தனியாக வந்த யானை ஒன்று மா மரங்களை முறித்து நாசம் செய்து விட்டு சென்றுள்ளது.

இங்குள்ள சேரங்கல் மலைக் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வன எல்லை உள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு தனியாக வந்த யானை ஒன்று அங்குள்ள துரைசாமி (60) என்பவரின் நிலத்தில் வளர்ந்திருந்த மா மரங்களை முறித்து நாசம் செய்து விட்டு சென்றுள்ளது.

அக்கிராம மக்கள் சனிக்கிழமை தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசு வெடித்தும் வன எல்லையில் இருந்த யானையை விரட்டச் சென்றுள்ளனர். கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த கோபத்தில் இருந்த யானை அவர்களை ஆக்ரோஷத்துடன் விரட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com