கணினி அறிவியல் ஆசிரியர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க வேலூர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க வேலூர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநில இணைச் செயலாளர் அகிலன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலாஜி வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் சாம்சுந்தர் மற்றும் கணினி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
 கூட்டத்தில், புதிய வரைவு பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத் திட்டத்தை 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ஒரு தனி பாடமாக அமல்படுத்த வேண்டும். தமிழக அரசால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை அரசுப் பள்ளிகளில் விரைவில் நிரப்ப வேண்டும்.  தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.  அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 7-இல் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com