அரக்கோணத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருடப்பட்டது.
அரக்கோணம் அசோக்நகரில் லட்சிஅய்யனார் தெருவில் வசிப்பவர் கணேஷ்குமார்(30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இதனால் இவர் வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கணேஷ்குமாரின் தாய் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
இந்நிலையில் சனிக்கிழமை கணேஷ்குமார், வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 15 சவரன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

