ஆடிக் கிருத்திகையையொட்டி, வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருத்தணிக்கு 370 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆடிக் கிருத்திகை விழாவின்போது, தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வருவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற உள்ளது. இதையொட்டி, சனிக்கிழமை பக்தர்கள் பரணி காவடி எடுப்பர்.
இந்நிலையில், ஆடிக் கிருத்திகை விழாவில் பங்கேற்க வசதியாக வேலூர் மாவட்டத்தில் இருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்களுக்கு 370 சிறப்புப் பேருந்துகளை 1,310 நடைகள் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 516 நடைகள், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 279 நடைகள், ஆற்காட்டிலிருந்து 196 நடைகள், குடியாத்தத்தில் இருந்து 119 நடைகள், பேர்ணாம்பட்டில் இருந்து 42 நடைகள், திருப்பத்தூரில் இருந்து 158 நடைகள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர, வேலூர் மாவட்டத்திலுள்ள ரத்தினகிரி, வள்ளிமலை முருகன் கோயில்களுக்கும் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், முக்கிய கோயில்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








