வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு எம்.பி.பி.எஸ். மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின. புதிய மாணவர்களுக்கு முதுநிலை மாணவ, மாணவிகள் பூக்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் நடைபெற்ற வரவேற்பு விழாவில் கல்லூரி முதல்வர் சாந்திமலர் பேசியதாவது:
நிகழ் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தற்போது 85 மாணவர்களின் சேர்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் 15 மாணவர்கள் தேசிய இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் வருவர்.
எம்.பி.பி.எஸ். படிக்க வந்துள்ள மாணவர்கள் மருத்துவ தொழில்நுட்பத் துறையில் மிகச் சிறந்தவர்களாக வரவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் ஆகும்.
வழக்கத்துக்கு மாறாக முதலாமாண்டின் இறுதியிலேயே மருத்துவப் பயிற்சியை தெரிந்து கொள்ளும் வகையில் மருத்துவப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாறிவரும் சூழலுக்கு ஏற்ப அடிப்படை அறிவியலுடன் சேர்ந்து மாணவர்களை தயார் செய்வதில் உறுதி பூண்டுள்ளது.
தொழில்நுட்ப கல்வியுடன் மாணவர்கள் தங்களது உரிமை, பொறுப்புகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும். மருத்துவ அறிவியல் அறிவை மனதில் வைத்து அன்போடு, உளப்பூர்வமாக நோயாளிகளை கையாள வேண்டும் என்றார் அவர்.
இதில், துணை முதல்வர் பி.ஆதிகேசவன், துணைக் கண்காணிப்பாளர் திருமால்பாபு, நிலையக் குடியிருப்பு மருத்துவர் சி.இன்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்

மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து தில்லியில் போராட்டம் - புகைப்படங்கள்






