இலவச வீட்டுமனை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஆம்பூர் வருவாய்த் துறை கிராம சாவடி எதிரே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆம்பூரில் கடந்த 2010-ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை கோரி 388 பேர் மனு அளித்தனர். ஆனால், அந்த மனுக்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆர். தேவதாஸ் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநிலப் பொதுச் செயலாளர்
டி.எம். மூர்த்தி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நகரத் துணைச் செயலாளர் கே.எஸ். ஹசேன், நிர்வாகிகள் ராஜ்குமார், கர்ணன், துர்காதேவி, அக்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணைச் செயலாளர் எம்.பாரூக் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேஜரிவாலின் 'பி-டீம்' சிஜேபி - சுவாதி மலிவால் குற்றச்சாட்டு!

சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


