நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

" 24-இல் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி தொடக்கம்'

தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அரக்கோணத்தில் இருந்து நாட்டறம்பள்ளி வரையில் அதிமுகவினர் 1,000 பேர் பங்கேற்கும்

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அரக்கோணத்தில் இருந்து நாட்டறம்பள்ளி வரையில் அதிமுகவினர் 1,000 பேர் பங்கேற்கும் 6 நாள் சைக்கிள் பேரணி வரும் 24-ஆம் தேதி அரக்கோணத்தில் இருந்து தொடங்குகிறது என எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தார். 
வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வாலாஜாபேட்டையில் அண்மையில் 
நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவர் ஆர்ஜிகே நந்தகோபால் தலைமை வகித்தார். நகரச் செயலாளர்கள் என்.கே.மணி, எ.இப்ராஹிம் கலிலுல்லா, ஒன்றியச் செயலாளர்கள் பெல் ச.கார்த்திகேயன், தாஜ்புரா எம்.குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜாபேட்டை நகர செயலாளர் டபிள்யூ.ஜி.மோகன் வரவேற்றார்.
கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி கலந்துகொண்டு, ஆலோசனைகளை வழங்கிப் பேசியதாவது...
தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஜெயலலிதா பேரவை சார்பில், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்று 
வருகிறது.
அதேபோல் வேலூர் மாவட்டத்தில் அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், அரக்கோணத்தில் இருந்து நாட்டறம்பள்ளி வரையில் அதிமுகவினர் 1,000 பேர் கலந்துகொள்ளும் 6 நாள் சைக்கிள் பேரணி ஆகஸ்ட் 24-ஆம் தேதி அரக்கோணத்தில் இருந்து தொடங்குகிறது. 
முன்னதாக 23-ஆம் இரவு அரக்கோணம் நகரில் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 24-ஆம் தேதி காலை 7 மணியளவில் அரக்கோணம் நகரில் தொடங்கும் சைக்கிள் பேரணியானது, நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, முத்துகடை, ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம், சத்துவாச்சாரி, வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நகரங்கள் வழியாகச் சென்று, நாட்டறம்பள்ளியில் வரும் 29-ஆம் தேதி மாலை நிறைவடைகிறது. அன்று இரவு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றார். 
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அ.முகமதுஜான், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சி.ஏழுமலை, எஸ்ஆர்கே.அப்பு, வி.ராமு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.