
ஜோலார்பேட்டை அருகே அரசு மதுபானங்களை பதுக்கி விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தாபா ஓட்டல், பெட்டிக் கடை, தெருவோரம் உள்ள மீன் வறுவல் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு மதுபாட்டில்கள் முறைகேடாக விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை ஜோலார்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகே அடுத்தடுத்து 2 தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸார் சோதனை மேற்கொண்டதில் அரசு மது பாட்டில் மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பனைக்கு செய்தது தெரியவந்தது.
பின்னர், தாபா ஓட்டல்களின் உரிமையாளர்களான பழனி (47), வாணியம்பாடி அருகே ஜனதாபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (42), திருப்பத்தூர் உபாசகர் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (38) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், தாமலேரிமுத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தாபா ஓட்டலில் பணிபுரியும் வடமாநிலத்தைச் சேர்ந்த குந்தன்குமார் (31) மற்றும் பேருந்து நிலையம் அருகே மது பாட்டில் விற்பனை செய்த கோடியூரைச் சேர்ந்த லட்சுமி (65), வக்கணம்பட்டியைச் சேர்ந்த தேவராஜ் (75) செல்வம் தெருவை சேர்ந்த திலீப் (35) ஆகிய 7 பேரை கைது செய்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து 7 பேரையும் திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றம் 2-இல் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான 315 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





