‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சாலையோரங்களில் மரக்கன்று நடும் விழா

சுந்திர தினத்தை முன்னிட்டு, ஆற்காடு வட்டம், வேம்பி கிராம இளைஞர் அணி, கலவை ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து பசுமை இந்தியா மற்றும்

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

சுந்திர தினத்தை முன்னிட்டு, ஆற்காடு வட்டம், வேம்பி கிராம இளைஞர் அணி, கலவை ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து பசுமை இந்தியா மற்றும் கிராமிய சுற்றுப்புற சூழல் பராமரிப்புக்காக சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தின. 
நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர்  எம்.முருகானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.சதிஷ், எம்.நந்தகுமார், பயிற்றுநர் பி.தாண்டவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி நிர்வாகி கி.சு.புருஷோத்தமன் சின்னராஜ் வரவேற்றார். ஆற்காடு நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அ.சத்தியசாயிநாதன், உதவிப் பொறியாளர்  எஸ்.ஞானபிரகாசம், கலவை காவல் ஆய்வாளர்  கோவிந்தசாமி, வனவர் ஆர்.சந்திரசேகரன், மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் விஜயராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், கலவை முதல் மாம்பாக்கம் வரையுள்ள சாலையோரங்கள் மற்றும் பென்னகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டப்பட்டன.
நிகழ்ச்சியில் கலவை பங்காரு அடிகளார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  எம்.செங்கோட்டையன், பென்னகர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் எம்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.