ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

ஆம்பூர் அருகே மூடிக்கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
ஆம்பூர் அருகே பேர்ணாம்பட்டு ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சியில் பழைய அரங்கல்துருகம், புது அரங்கல்துருகம், காட்டு வெங்கடாபுரம், மத்தூர் கொல்லை, காரப்பட்டு, சுட்டக்குண்டா, பொன்னப்பல்லி, அபிகிரிப்பட்டறை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.
இந்த அரங்கல்துருகம் ஊராட்சியில் அபிகிரிப்பட்டறை கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அபிகிரிப்பட்டறை கிராமத்தின் அருகே கடந்த 2011-2012-ஆம்  ஆண்டு மகளிர் சுகாதார வளாகம் ரூ. 2.88 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. 
 இந்த மகளிர் சுகாதார வளாகத்தில் கழிப்பறைகள், குளியலறைகள், துணி துவைக்கும் வசதி ஆகிய வசதிகள் உள்ளன. இந்த மகளிர் சுகாதார வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:  இந்த ஊராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் பழுதடைந்து உள்ளன. பொதுமக்கள் குடிநீருக்கு பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டியது. தண்ணீர் தேவைகளுக்காக தனியார் பம்புசெட்டுகளுக்கு போக வேண்டியுள்ளது. மேலும்,  காலைக்கடன் கழிப்பதற்கும், குளிப்பதற்கும் இந்த மகளிர் சுகாதார வளாகத்துக்கு தண்ணீர் வசதி செய்து தந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.