ராணிப்பேட்டையை அடுத்த புளியந்தாங்கல் முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்கு 108 பால் குடங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டையை அடுத்த புளியந்தாங்கல் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் 12-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணியளவில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கலச பூஜையுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, 7.30 மணியளவில், புளியந்தாங்கல் ஏரிக்கோடி செல்வ விநாயகர் கோயிலில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டு முத்தாலம்மன் கோயிலை வந்தடைந்தது.
தொடர்ந்து, 9 மணியளவில் பெண்களும், சிறுவர்களும் நீண்ட வரிசையில் நின்று, முத்தாலம்மனுக்கு தாங்கள் கைகளால் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, அன்ன தானம் ஆகியவை நடைபெற்றன. இதில், புளியந்தாங்கல், ஏரிக்கோடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புளியந்தாங்கல், ஏரிக்கோடி கிராம பால்குட விழாக் குழுவினர்கள், கோயில் நிர்வாகிகள், கிராம பொது மக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி இளநிலை எழுத்தா் பணிக்கான தட்டச்சு தோ்வில் 17 போ் மட்டுமே தோ்ச்சி

தில்லியில் பல இடங்களில் மழை: மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு

மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க கோரிக்கை
குப்பை மேலாண்மை சிக்கல்: இந்தூா் மாடல் நடைமுறைப்படுத்த துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


