காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

புளியந்தாங்கல் முத்தாலம்மனுக்கு  108 பால்குட அபிஷேகம்

ராணிப்பேட்டையை அடுத்த புளியந்தாங்கல் முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்கு 108  பால் குடங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

ராணிப்பேட்டையை அடுத்த புளியந்தாங்கல் முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்கு 108  பால் குடங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டையை அடுத்த புளியந்தாங்கல் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் 12-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணியளவில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கலச பூஜையுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, 7.30 மணியளவில், புளியந்தாங்கல் ஏரிக்கோடி செல்வ விநாயகர் கோயிலில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டு முத்தாலம்மன் கோயிலை வந்தடைந்தது.
தொடர்ந்து, 9 மணியளவில் பெண்களும், சிறுவர்களும் நீண்ட வரிசையில் நின்று, முத்தாலம்மனுக்கு தாங்கள் கைகளால் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, அன்ன தானம் ஆகியவை நடைபெற்றன. இதில், புளியந்தாங்கல், ஏரிக்கோடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புளியந்தாங்கல், ஏரிக்கோடி கிராம பால்குட விழாக் குழுவினர்கள், கோயில்  நிர்வாகிகள், கிராம பொது மக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.