முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

தேசிய மகளிர் இறகுப்பந்து போட்டி: பெங்களூரு ஜெயின் பல்கலை. முதலிடம்

வேலூர் விஐடியில் நடைபெற்ற அகில இந்திய  பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிர்  இறகுப் பந்து

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

வேலூர் விஐடியில் நடைபெற்ற அகில இந்திய  பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிர்  இறகுப் பந்து போட்டியில் முதலிடம் பெற்ற பெங்களூரு ஜெயின் பல்கலைக் கழக அணிக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஆகியோர் கோப்பை வழங்கினர்.
விஐடியில்  தென் மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிர் இறகுப் பந்து போட்டிகள் கடந்த  4-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெற்றன. 
இதில், முதல் 4 இடங்களைப் பிடித்த கோழிக்கோடு பல்கலைக் கழகம் (கேரளம்), ஆந்திர பல்கலைக் கழகம் (விசாகப்பட்டினம்), சாவித்திரி பாயி பூலே புணே பல்கலைக் கழகம் (புணே) பெங்களூரு ஜெயின் பல்கலைக் கழக அணிகள் அகில இந்திய இறகுப் பந்து போட்டிக்கு தகுதி பெற்றன. இதேபோல், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டலங்களில் நடைபெற்ற போட்டிகளில் தலா முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகளும் அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்றன. 
இதைத்  தொடர்ந்து, அகில இந்திய அளவிலான இறகுப் பந்து போட்டிகள் வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கின.
இறுதிப் போட்டியில் பெங்களூரு, ஜெயின் பல்கலைக் கழகம் முதலிடம் பிடித்தது. 
இரண்டாம் இடத்தை சாவித்திரி பாயி பூலே புணே பல்கலைக் கழகம் (புணே), மூன்றாமிடத்தை ஆந்திர பல்கலைக் கழகம் (விசாகப்பட்டினம்), நான்காமிடத்தை கோழிக்கோடு பல்கலைக் கழகம் (கேரளம்) ஆகியன பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், வேலூர்  மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஆகியோர் கோப்பைகளை வழங்கினர். முன்னதாக விஐடி உடற்கல்வி துறை இயக்குநர் என்.வி.தியாகசந்தன் வரவேற்றார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.