
நாட்டறம்பள்ளி அருகே காட்டுப் பகுதியில் துணியால் கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி சுண்ணாம்புகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி வளர்மதி (50). இவர், புதன்கிழமை மல்லப்பள்ளி கல் குவாரி அருகே உள்ள காட்டுப் பகுதியில் சில பெண்களுடன் விறகு சேகரிக்க சென்றாராம். அப்போது, தனியே விறகு சேகரித்துக் கொண்டிருந்த வளர்மதியை மர்ம நபர்கள் துணியால் கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி முரளி தலைமையில் ஆய்வாளர் சாந்தலிங்கம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர், வளர்மதியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலம் அருகே இருந்த 2 கத்திகளையும் கைப்பற்றினர்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






