விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாரதிய கிசான் சங்க கரும்பு உற்பத்தியாளர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.முனுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:
2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண் உற்பத்தி செலவின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும், விவசாயக் கடன் கூடுதலாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
விவசாயத்துக்காகப் பெற்ற பழையக் கடன் நிலுவையில் உள்ள போது கடன் பெறும் தகுதி இழந்த விவசாயி மீண்டும் எப்படி கடன் பெற இயலும். பயிர்க் கடன் விவகாரத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கடந்த ஆட்சியாளர்கள் அனைத்து விவசாயக் கடன்களையும் அறவே ரத்து செய்தது போல் அல்லாமல் பயிர்க் கடனை மட்டும் தள்ளுபடி செய்து மற்ற வேளாண் கருவிகள் கடனுக்கான வட்டியும் ரத்து செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் பயிர்க் கடன் அசல் ரூ. 1 லட்சத்துக்கான வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.