ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

4 கால்நடைகள் மர்மச் சாவு

குடியாத்தம் அருகே 4 மாடுகள் மர்மமான முறையில் இறந்தன.

Updated On :9 ஜூலை 2018, 7:27 pm

குடியாத்தம் அருகே 4 மாடுகள் மர்மமான முறையில் இறந்தன.
 குடியாத்தத்தை அடுத்த கல்லேரியைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ் (35). இவருக்குச் சொந்தமான 2 பசு மாடுகள், 2 கிடாரிகள் திங்கள்கிழமை மேய்ச்சலுக்குச் சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்து தொட்டியில் தண்ணீர் குடித்துள்ளன. 
சிறிது நேரத்தில் வயிறு வீங்கி, வாயில் நுரை தள்ளிய நிலையில் ஒவ்வொன்றாக இறந்தன. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலபதி கொடுத்த தகவலின்பேரில், வட்டாட்சியர் பி.எஸ்.கோபி விசாரணை மேற்கொண்டார். 
நகர காவல் நிலையத்திலும் ரமேஷ் புகார் கொடுத்துள்ளார். மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் ஏதாவது விஷச்செடியை மாடுகள் மேய்ந்ததால் அவை இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை கால்நடை மருத்துவர் வந்து பிரேதப் பரிசோதனை செய்த பின்னரே கால்நடைகள் இறப்புக்கு காரணம் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.