ஜோலார்பேட்டை அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி இறந்தார்.
ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி மலைப் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (35). கட்டடத் தொழிலாளியான இவரும், இவரது சகோதரர் தேவேந்திரனும் ஜோலார்பேட்டையில் தங்கி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் சென்றனர். ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிப்பட்டு அருகே சென்றபோது எதிரே வந்த கேதாண்டப்பட்டி சுகர்மில் பகுதியைச் சேர்ந்த தமிழருவியின் பைக் மீது மோதியது. இதில் வேலு நிகழ்விடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த தேவேந்திரன், தமிழருவி ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தமிழருவி மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் புதிய நாடுகளுக்கு இடம்: இந்தியா வலியுறுத்தல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

