வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் திருடப்பட்ட படவேட்டம்மன் உலோகச் சிலை பென்னாகரத்தில் மீட்கப்பட்டது.
வாலாஜாபேட்டை பஜனை கோயிலில் இருந்த படவேட்டம்மன் உலோகச் சிலை உள்ளிட்ட மூன்று சிலைகள் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருடுபோயின. இதுகுறித்து தமிழக இந்துசமய அறநிலையத் துறை ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே எரப்பட்டியில் பூபதி என்பவரின் விவசாயத் தோட்டத்தில் சிலை மறைத்து வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சுகுமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் பூபதியின் விவசாயத் தோட்டத்தில் இருந்த சிலையை மீட்டு, பென்னாகரம் வட்டாட்சியர் அழகுசுந்தரத்திடம் திங்கள்கிழமை ஒப்படைத்தார். மீட்கப்பட்ட 17.45 கிலோ எடை கொண்ட படவேட்டம்மன் உலோகச் சிலையை பென்னாகரம் வட்டாட்சியர் அழகுசுந்தரம், ராணிப்பேட்டை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. கலைச்செல்வத்திடம் ஒப்படைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


