ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் இளைஞர் இறந்தார்.
Updated on
1 min read

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் இளைஞர் இறந்தார்.
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். 
அப்போது, ஜோலார்பேட்டை மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் இளைஞர் காயமடைந்தார். இதையடுத்து அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com