திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆம்பூர் நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் தலைமையில் கட்சிக் கொடியேற்றப்பட்டு பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் நகரச் செயலாளர் ஆர்.எஸ். ஆனந்தன், ரபீக் அஹமத், நசீர் அஹமத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாதனூர் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாதனூரில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
குடியாத்தத்தில் ...
குடியாத்தத்தை அடுத்த தாழையாத்தம் ஊராட்சி, மீனாட்சியம்மன் நகரில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிளை நிர்வாகி எம். சங்கரன் தலைமை வகித்தார். ஏ. சுகுமாரன் வரவேற்றார். வடக்கு ஒன்றியச் செயலர் கே. ரவி கட்சிக் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தெற்கு ஒன்றியச் செயலர் டி.கிருஷ்ணமூர்த்தி, அவைத் தலைவர் வி.ஆர். ஏழுமலை, நிர்வாகிகள் டி.அமர், சிவசந்துரு, டி.ஆர். அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு நகர திமுக சார்பில் அண்ணாசிலை அருகே நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் பொன்ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், பொருளாளர் விநாயகம், மாவட்ட பிரதிநிதிகள் கஜேந்திரன், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் நகர திமுக சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, நகரச் செயலர் ஐ.ராப்சன் தலைமை வகித்தார். வட்டச் செயலர் லிங்கம் முன்னிலை வகித்தார். நகர இளைஞர் அணி செயலர் பிரசாத் வரவேற்றார்.
மாவட்ட துணைச் செயலர் ராஜ்குமார், பொருளாளர் மு.கன்னைய்யன், நகர நிர்வாகிகள் வி.எல்.ஜோதி, ராஜேந்திரன், அன்புலாரன்ஸ், எஸ்.மணி, கோ.வ.தமிழ்வாணன், விக்கிரமன், வி.எஸ்.ஆர்.ரவிசந்திரன், தலைமைப் பேச்சாளர் குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.