ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்டாலின் பிறந்த நாள் விழா

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 9:10 pm

DIN

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
ஆம்பூர் நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் தலைமையில் கட்சிக் கொடியேற்றப்பட்டு பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னாள் நகரச் செயலாளர் ஆர்.எஸ். ஆனந்தன், ரபீக் அஹமத், நசீர் அஹமத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாதனூர் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாதனூரில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

குடியாத்தத்தில் ...
குடியாத்தத்தை அடுத்த தாழையாத்தம் ஊராட்சி, மீனாட்சியம்மன் நகரில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு கிளை நிர்வாகி எம். சங்கரன் தலைமை வகித்தார். ஏ. சுகுமாரன் வரவேற்றார். வடக்கு ஒன்றியச் செயலர் கே. ரவி கட்சிக் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தெற்கு ஒன்றியச் செயலர் டி.கிருஷ்ணமூர்த்தி, அவைத் தலைவர் வி.ஆர். ஏழுமலை, நிர்வாகிகள் டி.அமர், சிவசந்துரு, டி.ஆர். அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆற்காட்டில்...
ஆற்காடு நகர திமுக சார்பில் அண்ணாசிலை அருகே நடைபெற்ற  விழாவுக்கு நகரச் செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் பொன்ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், பொருளாளர் விநாயகம், மாவட்ட பிரதிநிதிகள் கஜேந்திரன், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆற்காடு  எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அரக்கோணத்தில்...
அரக்கோணம் நகர திமுக சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, நகரச் செயலர் ஐ.ராப்சன் தலைமை வகித்தார். வட்டச் செயலர் லிங்கம் முன்னிலை வகித்தார். நகர இளைஞர் அணி செயலர் பிரசாத் வரவேற்றார். 
மாவட்ட துணைச் செயலர் ராஜ்குமார், பொருளாளர் மு.கன்னைய்யன், நகர நிர்வாகிகள் வி.எல்.ஜோதி, ராஜேந்திரன், அன்புலாரன்ஸ், எஸ்.மணி, கோ.வ.தமிழ்வாணன், விக்கிரமன், வி.எஸ்.ஆர்.ரவிசந்திரன், தலைமைப் பேச்சாளர் குணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.