மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உணவுப் பாதுகாப்பு வேலூர் கோட்டை, ஏலகிரியில் விழிப்புணர்வு கண்காட்சி

உணவுப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேலூர் கோட்டை, ஏலகிரியில் திங்கள்கிழமை விழிப்புணர்வு முகாம்கள் தொடங்கப்பட்டன.

Updated On :14 மே 2018, 6:18 pm

உணவுப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேலூர் கோட்டை, ஏலகிரியில் திங்கள்கிழமை விழிப்புணர்வு முகாம்கள் தொடங்கப்பட்டன.
தமிழக உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தமிழகம் முழுவதும் உள்ள 53 சுற்றுலாத் தலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்படி, வேலூர் மாவட்டத்தில், வேலூர் கோட்டை, ஏலகிரி ஆகிய இரு இடங்களில் இந்த விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இம்முகாம்களில், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளிகளில் கலப்படம் செய்திட பயன்படுத்தப்படும் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மிளகில்
பப்பாளி விதைகள், அரிசியில் கல், சலவைக் கற்கள், மண் உருண்டைகள், உளுந்தில் தவிடு, தேயிலைத் தூளில் புளியங்கொட்டைத் தூள், தேனில் வெல்லப்பாகு, நெய்யில் வனஸ்பதி, மிருகக் கொழுப்பு, துவரையில் கேசரி பருப்பு, மஞ்சளில் ஈய அசிடேட், கடுகுகளில் அர்ஜிமோன் விதைகள் என உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் கார்பைடு கற்கள், வெயில் காலத்தில் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருள்கள், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருள்கள் ஆகியவை குறித்தும், உணவுப் பொருள்களை பரிசோதனை செய்து வாங்குவது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு துண்டறிக்கைகள் மூலமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.
மே 31-ஆம் தேதி வரை தினமும் காலை 9 முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் 7 மணி வரையும் இந்த முகாம் நடத்தப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெ.வெங்கடேசன் தெரிவித்தார்.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில், வேலூரிலுள்ள வணிகர்கள், காய்கறி, பழ வியாபாரிகள், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.