வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆம் ஆண்டு நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே ராஜீவ் காந்தி உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெ. ஜோதி தலைமை வகித்தார். முன்னாள் மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் ஜெ. தியாகராஜன், ஒன்றியத் தலைவர் எம். வீராங்கன், நகரத் தலைவர் கே.ஆர். கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஜி. விஜயேந்திரன், நிர்வாகிகள் எம்.டி. சரவணன், சிவாவெங்கடேசன், ரஷீத்கான், ஆ. தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேர்ணாம்பட்டில்...
பேர்ணாம்பட்டு நகர, ஒன்றிய காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் எதிரே ராஜீவ் காந்தி உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் நகரத் தலைவர் ஜி. சுரேஷ்குமார், நிர்வாகிகள் ரூபன், பெரியதம்பி, புஷ்பராஜ், கோபால், ராம்குமார், கோவிந்தராஜ், பிரவீண், சஞ்சய், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில்...
ஆம்பூர் புறவழிச் சாலை-தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் சா.சங்கர், சரவணன், மாணிக்கம், சமியுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடியில் மகிளா காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவர் கனகா தலைமை வகித்தார். சிறுபான்மைத் துறை மாநிலச் செயலாளர் சையத்நிசார்அஹமத், மாவட்ட துணைத் தலைவர் சலாவுத்தீன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விநாயகமூர்த்தி, குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ரேஷ்மா வரவேற்றார்.
மகிளா காங்கிரஸ் வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமையில்
சி.எல். சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிர்வாகி சிவகுமார் நன்றி கூறினார்.
அரக்கோணத்தில்...
ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி திங்கள்கிழமை ஏற்கப்பட்டது.
அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அலுவலக மேலாளர் தே.து.கோபிநாத் தலைமை வகித்து, உறுதி மொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதில், நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டையில்...
வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸார் 50 பேர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் அளித்தனர்.
வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்
எஸ்.நியாஸ் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்கள் ஐ.அலாவுதீன், நந்தினி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆர். முஹம்மது ஷபி, கே.ஆர்.வெங்கட், டி.பிரபாகரன், சட்டப்பேரவைத் தொகுதி தலைவர்கள் ஜெ.பாலாஜி,
ஜெ.நியாஸ் அலி, ஜி.பிரகாஷ், குமார், சலிம் உள்ளிட்ட 50 பேர் ரத்தம் தானம் அளித்தனர்.
மாவட்ட தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளர் பரிமளா தேவி, ரத்த வங்கி அலுவலர் கீர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் மருத்துவமனை செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர். இதேபோல், ராணிப்பேட்டை நகர காங்கிரஸார் முத்துகடை காந்தி சிலை எதிரே ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மெளன அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி.மோகன், மோகனசுப்பிரமணி, ஞானசேகரன், உத்தமன், ராணி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்சி., எஸ்டி. பிரிவு மாவட்டத் தலைவர் வி.நாகேஷ் ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் நிர்வாகிகள் ராமதாஸ், சேகர், துரை, உதயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

