மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்த ஊரில் வரவேற்பு

திமுக பொருளாளராக துரைமுருகன் பொறுப்பேற்ற பிறகு தனது சொந்த ஊரான காட்பாடிக்கு புதன்கிழமை வருகை புரிந்தார். அவருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திமுக பொருளாளராக துரைமுருகன் பொறுப்பேற்ற பிறகு தனது சொந்த ஊரான காட்பாடிக்கு புதன்கிழமை வருகை புரிந்தார். அவருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
காலை 9.15 மணிக்கு ரயிலில் வந்திறங்கிய துரைமுருகனுக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக சார்பில் கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், கேரள சென்டை மேளம், பட்டாசுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பேரணியாகச் சென்று சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அண்ணா சிலைக்கும், அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கும் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காமராஜர் சிலை, பெரியார் சிலைகளுக்கும் மாலை அணிவித்தார். 
இதையடுத்து, காட்பாடியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் பங்கேற்ற துரைமுருகனுக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக சார்பில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர். 
அப்போது அவர் பேசியதாவது: 
திமுக பொருளாளராக பொறுப்பேற்ற எனக்கு முதல்முறையாக எனது சொந்த மாவட்டத்தில் இருந்து தேர்தல் நிதியாக ரூ. 1 கோடி  வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தினரும் நிதி வழங்க வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:
குட்கா விவகாரத்தில் நடந்துவரும் சோதனை முன்பே நடந்திருக்க வேண்டியது. தாமதமாக தற்போது நடக்கிறது. எனினும், இந்த சோதனை வரவேற்கத்தக்கது. தற்போது பதவியில் உள்ளவர்களிடம் மட்டும் சோதனை நடத்தாமல் ஓய்வு பெற்ற  காவல் அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும். கர்நாடக மாநிலம் 
மேக்கே தாட்டுவில் அணை கட்டப்பட்டால் இப்போது கிடைத்து வரும் தண்ணீரும் தடைபட்டுவிடும். இதை தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க வேண்டும்.
ஆந்திரத்தில் சிறு கிளை ஆறுகளில்கூட தடுப்பணை  கட்டப்படுகிறது. இது தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறதா என தெரியவில்லை. பொதுப் பணித் துறை அமைச்சர் இந்நேரம் அங்கு சென்று பார்த்திருக்க வேண்டும்.  பெட்ரோல் டீசல் விலை கருணாநிதி ஆட்சி காலத்தில் குறைக்கப்பட்டது.  ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்துதான் உயர்ந்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசு இதை பார்த்துக்கொண்டிருப்பது நல்லதல்ல.  ஏற்கெனவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்  நடத்தப்பட்ட சோதனைக்கே நடவடிக்கை இல்லை. தற்போதைய சோதனைக்குப் பிறகும் நடவடிக்கை  இல்லை என்றால் சிபிஐ கேலிக்குரியதாகி விடும் என்றார்.
முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், திமுக எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), ப.கார்த்திகேயன் (வேலூர்), ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூர்), ஈஸ்வரன் (ஆற்காடு), மேற்கு மாவட்ட திமுக செயலர் முத்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நிதியாக ரூ. 1 கோடிக்கான காசோலையை துரைமுருகனிடம் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.