கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

திருப்பத்தூர் கனிமச் சுரங்கத்தில் ரூ.1.80 கோடியில் நவீன தரம் பிரிக்கும் அலகு: ஆட்சியர் ஆய்வு 

திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள வெர்மிகுலேட் சுரங்கத்தில் ரூ. 1.80 கோடி மதிப்பில் நவீன தரம் பிரிக்கும் அலகு அமைக்கப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள வெர்மிகுலேட் சுரங்கத்தில் ரூ. 1.80 கோடி மதிப்பில் நவீன தரம் பிரிக்கும் அலகு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விரைவில் திறக்க உள்ள இந்த அலகில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
திருப்பத்தூர் வட்டத்தில் தமிழக கனிம நிறுவனத்தின் சார்பில் டாமின் வெர்மிகுலேட் சுரங்கம் 1978-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. செவ்வத்தூர், எலவம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட 23 ஆயிரத்து 710 ஹெக்டர் கையகப்படுத்தப்பட்ட நிலப் பரப்புகளிலிருந்து இந்த வெர்மிகுலேட் எனும் கனிமம் வெட்டி எடுக்கப்படுகிறது. 
இந்த வகை கனிமம் வெப்பத்தை தனிக்கும் தன்மை கொண்டதால் வீடுகளின் கூரைகளில் பதிக்கவும், மின்சார இன்சுலேட்டர்கள், பேருந்து மேற்கூரை ஷீட், வேளாண் துறையில் மரக்கன்றுகளை சுற்றி ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் மாதம் 100 முதல் 150 டன் அளவுக்கு இந்த வெர்மிகுலேட் கனிமம் வெட்டி எடுக்கப்பட்டு வேளாண் பயன்பாட்டிற்காக கோவை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 
இதன்தொடர்ச்சியாக, செவ்வத்தூர் ஊராட்சியில் வெர்மிகுலேட் கனிமத்தை தரம் பிரித்து சூடேற்றிப் பிரிக்கும் நவீன அலகு ரூ. 1.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அலகை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விரைவில் திறந்து வைக்க உள்ளார். 
இந்நிலையில், இந்த கனிமம் தரம் பிரிக்கும் நவீன அலகையும், வெர்மிகுலேட் கனிமம் வெட்டியெடுக்கப்படும் சுரங்கப் பகுதிகளையும் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதன் செயல்பாடுகள் குறித்து கோட்ட மேலாளர் ரமேஷ்பாபுவிடம் கேட்டறிந்தார்.
பின்னர், ஆட்சியர் கூறியதாவது:
செவ்வத்தூர், எலவம்பட்டி ஊராட்சிகளில் உள்ள வெர்மிகுலேட் கனிமச் சுரங்கத்தில் கோடைக்காலத்தில் மட்டுமே கனிமம் வெட்டும் பணி நடை
பெறும். மழைக் காலத்தில் பணிகள் நடைபெறாது. இந்த நிறுவனத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 40 பேர் பணியாற்றுகின்றனர்.
இதேபோல் சென்னை அம்பத்தூரில் ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த வெர்மிகுலேட் தாது கனிமத்தை எடுத்து வரும் செலவைக் குறைக்கும் வகையில் இந்தப் புதிய சுரங்க அலகு கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பெருமளவு பயண நேரம் மிச்சப்படும். கலனில் போட்டு சூடேற்றப்படும் போது வெர்மிகுலேட் கனிமத் தாது மண் பாப்கார்ன் போன்று மாறிவிடும். இவற்றை 3 பிரிவுகளாக தரம் பிரித்து அதன் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படும். இந்தப் புதிய அலகை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என்றார் அவர்.
அப்போது, சார்-ஆட்சியர் பிரியங்கா, சுரங்கப் பணி உதவியாளர் கார்த்திகேயன், திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.