
ஆம்பூரில் ரயில்வே பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில பொருளாளர் ஆரூன் ரஷீத் தெரிவித்தார்.
ஆம்பூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: ஆம்பூரில் அண்ணா நகர், ரபீக் நகர், சலாவுதீன் நகர் ஆகிய பகுதிகளில் ரயில்வே இருப்புப் பாதையோரம் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். ரயில்வே துறை அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அதிகாரிகள் இடத்தை அளந்து கல் நட்டுவிட்டுச் சென்றுள்ளனர். மேலும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்ற வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் அதை அனுப்பிய அதிகாரி யார்?, எந்த அலுவலகத்திலிருந்து வந்தது என்ற விவரம் இல்லை. செப்டம்பர் 19-ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும், 18-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டுமென மட்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றும்போது அங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தை வழங்கிய பிறகு அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றார். பேட்டியின் போது, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜஹிருஸ்ஸமா, துணைச் செயலாளர் முன்னா ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






