சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

கார் விபத்தில் நகராட்சி பணியாளர் சாவு: 4 பேர் காயம்

ஆம்பூரில் கார் கவிழ்ந்த விபத்தில் அரக்கோணம் நகராட்சிப் பணியாளர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.  4 பேர் காயமடைந்தனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:00 am IST

ஆம்பூரில் கார் கவிழ்ந்த விபத்தில் அரக்கோணம் நகராட்சிப் பணியாளர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.  4 பேர் காயமடைந்தனர்.
அரக்கோணம் நகராட்சியில் பொறியியல் பிரிவில் பணிபுரிந்து வந்தவர் நாகராஜ் (44). இவர், தனது மனைவி ராணி (35), மகன் ஜவந்த் (2), உறவினர் கமலேஷ் (19) ஆகியோருடன் காரில் மைசூருக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை அரக்கோணம் திரும்பிக் கொண்டிருந்தார். காரை ஓட்டுநர் அரிஷ் ஓட்டிச் சென்றார். 
ஆம்பூர் கோவிந்தாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த சுவர் மீது மோதிக் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். 
தகவலறிந்த ஆம்பூர் நகர போலீஸார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் நாகராஜ் இறந்தார். ராணி, குழந்தை ஜவந்த் ஆகியோர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆம்பூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.