அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

சென்னை-மங்களூர் விரைவு ரயில் இனி ஜோலார்பேட்டையில் நின்று செல்லும்

சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இனி ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:13 am IST

சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இனி ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை வழியாக மெங்களூர் வரைச் செல்லும் சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ரயில் ஜோலார்பேட்டையில் நிறுத்துவதில்லை. 
இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலை ஜோலார்பேட்டையில் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சனிக்கிழமை முதல் இந்த ரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த ரயில் மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 8.05 மணிக்கு ஜோலார்பேட்டை வந்து சேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு மங்களூர் சென்றடையும். 
இதே போல், மங்களூரில் இருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.35க்கு ஜோலார்பேட்டை வந்து சேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 8 மணிக்கு சென்னை சென்றடையும்.
இந்த ரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்வதை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய மேலாளர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். வணிகப் பிரிவு மேற்பார்வையாளர் பிரகாஷ்பாபு, ஸ்டேஷன் மாஸ்டர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக அதிமுக நகர செயலர் சீனிவாசன் கலந்துகொண்டு, ஜோலார்பேட்டையில் நின்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டி இயக்கச் செய்தார். நிகழ்ச்சியில் ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.