உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

விஐடி மாணவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு

விப்ரோ நிறுவனம் அதிகப்படியான சம்பளத்துக்கு விஐடி மாணவர்கள்139 பேரை ஒரே கட்டமாகத் தேர்வு செய்துள்ளது.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:13 am IST

விப்ரோ நிறுவனம் அதிகப்படியான சம்பளத்துக்கு விஐடி மாணவர்கள்139 பேரை ஒரே கட்டமாகத் தேர்வு செய்துள்ளது. இது 8-ஆவது முறையாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
"விப்ரோ டெக்னாலஜீஸ்' நிறுவனம் ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கான வளாகத் தேர்வை விஐடி பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தியது. இதில் கடந்த ஆண்டு பொறியியல் பட்டம் பெற்ற விஐடி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், ஆண்டுக்கு தலா ரூ.6 லட்சம் சம்பளத்துக்கு 139 பேர் ஒரே கட்டமாக பணி நியமனம் செய்யப்பட்டனர். 
நாட்டில் அதிக எண்ணிக்கையில் விஐடி மாணவர்களை ஒரே கட்டத் தேர்வு செய்துள்ளது சாதனையாக கருதப்பட்டு 2019-ஆம் ஆண்டுக்கான லிம்கா சாதனைப் புத்தகத்தின் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வளாகத் தேர்வு மூலம் அதிகப்படியாக விஐடி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அடுத்து தொடர்ந்து 8-ஆவது முறையாக விஐடி பல்கலைக்கழகம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.