திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.75 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டது.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம், ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதான தொழிலாக பருத்தி சாகுபடியைச் செய்து வருகின்றனர். அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தியை மூட்டைகளாகக் கட்டி திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்துக்கு கொண்டு வந்தனர்.
பருத்தி ஏலம் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏலம் எடுக்க திருப்பூர், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். 5 ஆயிரம் மூட்டை பருத்தி மூட்டைகள் டி.சி.எச். எனப்படும் பருத்தி ரகம் ரூ. 7 ஆயிரத்து 400-க்கும், ஆர்.சி.எஸ். எனப்படும் பருத்தி ரூ. 6 ஆயிரத்து 300-க்கும் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா!
கர ஓடிடி தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


