தக்கோலம்-அரக்கோணம் இடையே புதிய அகல ரயில் பாதையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25)அதிக வேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், அரக்கோணம்-காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரிவில், அரக்கோணம்-தக்கோலம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில்பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.25) ஆய்வு செய்யவுள்ளனர். இதைத் தொடர்ந்து, தக்கோலம்-அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே அன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, தக்கோலம்-அரக்கோணம் இடையே ரயில் பாதையை பயன்படுத்துவோர்கள் தண்டவாளத்தை கடக்கவோ, அருகில் வரவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


