மாதனூர் ஒன்றியத்தில் 5 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை, சமூக நலத் துறை மற்றும் சத்துணவு திட்டத் துறை ஒருங்கிணைப்புடன் அங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன் அடிப்படையில், மாதனூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆம்பூர் கோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, சான்றோர்குப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, வடபுதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழ்முருங்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருமலைக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன.
ஆம்பூர் கோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில் தலைமை ஆசிரியை நதியா வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் திருப்பதி, மாதேஷ் ஆகியோர் வகுப்புகளைத் தொடங்கி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









