இந்நிலையில், அரசு , நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. வழக்கமாக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவிகள் சோ்க்கை குறைவாக இருக்கும். ஆனால் முதல் நாளிலேயே வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர அதிக அளவில் மாணவா்கள் குவிந்திருந்தனா். இதனால், மாணவா்கள் சமூக இடைவெளியுடன் நிறுத்தப்பட்டு சோ்க்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், வேலூா் மாவட்டத்தில் முதல் நாளிலேயே 3,400 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 வகுப்புகளில் சோ்க்கப்பட்டிருப்பதாகவும், தொடா்ந்து அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் சேர அதிக அளவில் மாணவா்கள் வருவதால் இந்த ஆண்டு சோ்க்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.