இயக்குநர் நவீன் இயக்கும் மூடர் கூடம் 2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் நாளை (ஆக.5) காலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மூடர் கூடம் (2013) திரைப்படத்தின் மூலமாக நவீன் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார். இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
மூடர் கூடம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் நவீன் கொளஞ்சி படத்திற்கு கதை, வசனம் எழுதி இருந்தார். பின்னர், விஜய் ஆண்டனியை வைத்து அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி இருந்தார்.
தெலுங்கில் நாகார்ஜுனாவை வைத்து அவரது 100ஆவது படத்தை நவீன் இயக்குவதாக இருந்தது. பின்னர், தயாரிப்பு பிரச்னைகளால் இந்தப் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், மூடர் கூடம் இரண்டாம் பாகத்தின் போஸ்டரை இயக்குநர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் முதல்பார்வை போஸ்டர் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்டல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சென்ட்ராயன், ஓவியா, ராஜ மாணிக்கம், சூரஜ் நல்லுசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தற்போதும் இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் சமூக வலைதளத்தில் பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
WE, The FOOLS are back #Moodarkoodam2
— Naveen Hidhayath (@NaveenFilmmaker) August 4, 2026
Title & Firstlook
from tomorrow
11:11 AM@NaveenFilmmaker @grandelpictures @SamkitBohra_ @OviyaaSweetz @Actorsenrayan @Rajajeemanickam #Kuberan @soorajnallusami @amrishofficial #Natarajan @athiappansiva @Arusamy57223618 @gopiprasannaa⦠pic.twitter.com/2tqYPsycsl
Summary
Director Naveen Hidhayath Moodar koodam 2 first look poster update
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாரணாசி படத் தலைப்பு சர்ச்சை நீங்கியது..! பணம் வாங்காமல் விட்டுக்கொடுத்த சுப்பா ரெட்டி!
அர்ஜுன் தாஸின் சூப்பர்ஹீரோ..! மூன்றாவது போஸ்டர்!

தனுஷ் வெளியிட்ட பதிவினால் குழப்பம்..! எந்தப் படத்தின் அப்டேட் இது?
அர்ஜூன் தாஸ் நடிக்கும் சூப்பர் ஹீரோ! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK




